தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலை வேண்டுமா..? முகாமுக்கு வாங்க - அரியலூர் ஆட்சியர் அழைப்பு! - were hiring

அரியலூரில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.

அரியலூரில் வேலை வாய்ப்பு முகாம்
அரியலூரில் வேலை வாய்ப்பு முகாம்

By

Published : Feb 21, 2023, 2:30 PM IST

அரியலூர்: வேலைவாய்ப்பு இன்றி தவித்து வரும் இளைஞர்கள் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; "அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம், மூன்றாம், நான்காம் வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தற்போது 24.02.2023 அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ள சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் 700-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும் வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்தும் பயன்பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்வதற்கு 18 வயது முதல் 35 வரையிலான ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04329 - 228641, 9499055914 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியில் ரீமேக்காகும் "லவ் டுடே" - ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை என்ன?

ABOUT THE AUTHOR

...view details