அரியலுார் மாவட்டம் பொய்யாதநல்லுார் கிராமத்தில் ஸ்ரீமகா பிரத்தியங்கரா தேவி கோயில் உள்ளது. இக்கோவிலில் மாதமாதம் வரும் அமாவாசையில் மிளகாய் சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். இதில் கலந்துகொள்பவர்களுக்கு கண் திருஷ்டி, பில்லி சூனியம், புத்திர தோஷம், திருமண தடை, தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட சகல தோஷங்கள் நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஸ்ரீமகா பிரத்தியங்கரா தேவி கோயில்: அமாவாசை மிளகாய் சண்டியாகம்
அரியலுார்: ஸ்ரீமகா பிரத்தியங்கரா தேவி கோயிலில் அமாவாசை தினத்தை முன்னிட்டு, மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
chandi-yagam-in-ariyalur
இந்நிலையில், சித்திரை அமாவாசையை முன்னிட்டு, இன்று வழக்கம்போல் யாகம் நடைபெற்றது. யாகத்தில் மா, பலா, வாழை எனப் பலவகை பழங்களும், புடவைகளும் இடப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.