அரியலூர்:ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பேருந்து நிழற்குடை ஒன்றும் அதை ஒட்டி சில வீடுகளும் அதை ஒட்டி ஒரு குட்டையும் உள்ளது. பேருந்து நிறுத்தம் அருகே வந்த பொதுமக்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அப்பகுதிகள் என்னவென்று தேடினர்.
அப்போது சாக்கு மூட்டை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வருவதை கண்ட அப்பகுதியினர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், சாக்கு மூட்டையில் பிணம் ஏதும் இருக்குமோ என்ற கோணத்தில் சந்தேகப்பட்டு, முதலில் மூட்டையை பிரிக்காமல் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.