தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விதிகளுக்கான மாரத்தான் போட்டி! - மாரத்தான் போட்டி

அரியலூர்: சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டி, நடந்த மாரத்தான் போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ariyalur marathon

By

Published : Nov 20, 2019, 1:26 PM IST

அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தலைமையில் சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியும், உடல் ஆரோக்கியத்துடன் வாழ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மராத்தான் போட்டி நடைபெற்றது.

இப்போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. 14 வயதுக்குக்கீழ்,14 வயதிற்கு மேல் உள்ள ஆண்களுக்கு தனியாகவும், 14 வயதிற்குக் கீழ், 14 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்குத் தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அரியலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான்

அதுமட்டுமின்றி, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் இந்த மாரத்தானில் மாவட்ட காவல்துறை எஸ்பி ஸ்ரீனிவாசன், தா.பழூர் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, மாணவ, மாணவிகள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:

சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா!

ABOUT THE AUTHOR

...view details