தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூர்: கார் விபத்தில் 15 பேர் படுகாயம் - அரியலூர் செய்திகள்

அரியலூர்: காங்கேயன் குறிச்சி அருகே கார் கவிழ்ந்த விபத்தில், துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

accident
accident

By

Published : Aug 25, 2020, 10:33 PM IST

அரியலூர் மாவட்டம் நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் காங்கேயன் குறிச்சி கிராமத்தில் உயிரிழந்த உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு டாட்டா ஏசி கார் வாகனத்தில் சென்றனர். காங்கேயன் குறிச்சி அருகே செல்லும்போது எதிரில் வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடும் வகையில் வாகனத்தை திருப்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

மருத்துவமனை

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து இவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், இதுகுறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

காவலர்

இதையும் படிங்க:தாம்பரத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

ABOUT THE AUTHOR

...view details