தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெறி நோயால் 60,000 பேர் இறப்பு - செல்லப்பிராணிகள் பிரியர்களே உஷார்

உலகளவில் வெறி நோயால் ஆண்டுதோறும் 60,000 பேர் இறப்பதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வெறி நோயால் 60,000 பேர் இறப்பு - செல்லப்பிராணிகள் பிரியரே உஷார்!
வெறி நோயால் 60,000 பேர் இறப்பு - செல்லப்பிராணிகள் பிரியரே உஷார்!

By

Published : Jan 11, 2023, 1:56 PM IST

Updated : Jan 11, 2023, 2:43 PM IST

அரியலூர்: கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை சார்பில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம் மற்றும் நோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், “நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் மற்றும் வெறி நாய் கடியால் பாதிக்கப்படாமல் மனிதர்களை பாதுகாக்க, செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட வேண்டியது மிகவும் அவசியம். உலகளவில் வெறி நோயை முழுவதுமாக ஒழிப்பது இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மனிதர்களில் 99 சதவீத வெறி நோய் பாதிப்புகள், நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் மூலமாகவே எற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 60,000-க்கும் அதிகமான வெறி நோய் இறப்புகள் மனிதர்களில் எற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி மருந்து செலுத்துவதன் மூலமாகவும், தெரு நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து வெறி நோய் தடுப்பூசி அளிப்பதன் மூலமாகவும் நோய் பரவலை தடுக்க முடியும்.

கடந்த 2021 - 2022ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக 3,16,510 வெறி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் அரியலூர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு 3,850 வெறி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்த முகாமில் 150 நாய்களுக்கும், 9 பூனைகளுக்கும் என்று மொத்தம் 159 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

வெறி நோயின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அனைவருக்கும் அறியச் செய்தல், வளர்ப்பு மற்றும் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி அளித்தல், நாய் கடித்தவுடன் உடனடியாக உரிய மருத்துவ ஆலோசனை பெறுதல், எக்காரணம் கொண்டும் சுய மருத்துவம் அல்லது நாட்டு மருத்துவ முறைகளை மேற்கொள்ளாதிருத்தல் ஆகியன வெறி நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான முதல் படியாக அமையும்.

எனவே இந்த இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமில், பொதுமக்கள் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் நாய்களை கொண்டு வந்து வெறி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வெறி நோய் இல்லா உலகை உருவாக்க கால்நடை பராமரிப்புத்துறையுடன் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்வில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ஹமீதுஅலி, கால்நடை மருத்துவர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:அஜித் கட்அவுட்டிற்கு முதுகில் அலகு குத்தி மாலை அணிவித்த ரசிகர்

Last Updated : Jan 11, 2023, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details