தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 24, 2020, 7:54 PM IST

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்த இலவச வெள்ளாடுகள் வழங்கும் விழா

அரியலூர்: தமிழ்நாடு அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழாவை  மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கிவைத்தார்.

ariyalur
ariyalur

ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அத்திட்டங்களில் ஒன்றான, விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று அரியலூர் மாவட்டத்தில் இரண்டாயிரத்து 486 பயனாளிகளுக்கு தலா 4 வீதம் ஒன்பதாயிரத்து 944 வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.

இலவச வெள்ளாடுகள் வழங்கும் விழா

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா கலந்துகொண்டு தொடங்கி வைத்த இவ்விழாவில் கூடுதலாக ஆடுகளுக்கு இரண்டு நாள் குடற்புழு நீக்க முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் சுமார் 5 லட்சம் ஆடுகளுக்கான குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கப்படவுள்ளன. இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடுகள் வளர்ப்பவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கலை முன்னிட்டு ரூ. 10 கோடி அளவில் ஆடுகள் விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details