அரியலூர்:தாமரைக்குளம் ஊராட்சியில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்றுவருகின்றனர். இந்நிலையில் பள்ளிக் கட்டடம் இருந்த இடம் போதுமானதாக இல்லாததால் கிராம பொதுமக்கள் சார்பில் பள்ளிக்குப் பின்னால் இருந்த சுமார் ஒரு ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கி அரசிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து பள்ளி கட்டடம் கட்டப்பட்டு ஏற்கனவே பள்ளிக் கட்டடம் இருந்த இடம் மாணவர்கள் விளையாடும் விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டு மாணவர்கள் பயன்படுத்திவந்தனர்.
இந்நிலையில் தாமரைக்குளம் ஊராட்சி கட்டடத்தில் போதுமான இடவசதி இல்லை எனக் கூறி மாணவி, மாணவிகள் பயன்படுத்திவந்த விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்து பள்ளி நுழைவாயில் அருகே பல்வேறு வசதிகளுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.