கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்திவருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்கள் உணவுக்காக திண்டாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏழைகளுக்கு நேரடியாக உணவுப் பொருள்கள், நிவாரணப் பொருள்கள் வழங்கும்போது அரசு அலுவலர்கள் உடன் இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திருச்சி மாநகரில் உள்ள அம்மா உணவகங்களில் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதற்கான செலவை அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த வகையில் தலா 5 கிலோ வீதம் 300 அரிசி மூட்டைகளை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தார்.