சென்னை:தமிழ்நாட்டில் ஆயுத பூஜை, விஜயதசமியைத் தொடர்ந்து வார இறுதி விடுமுறை என நான்கு நாள்கள் விடுமுறை உள்ளதால் சென்னையில் பணிபுரியும் பலர் நேற்று தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். இதற்காக, அரசு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
ஆயுத பூஜை: 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் - ayutha pooja
தமிழ்நாட்டில் இன்று (அக். 14) ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுவரும் நிலையில் விடுமுறைக்காக சென்னையிலிருந்து சுமார் இரண்டு லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில் சேவைகள் நீட்டிப்பு
இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறைக்காக சென்னையிலிருந்து அரசுப் பேருந்துகள் மூலம் இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து 900 பேர் சொந்த ஊர்களுக்குப் பயணித்துள்ளனர். இதற்காகச் சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தம் ஐந்தாயிரத்து 422 பேருந்துகள் இயக்கப்பட்டதாகப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.