அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரின் தம்பி காசிநாதன் ஆவார். கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கருணாநிதி மகளின் வளைகாப்பு நிகழ்ச்சியில், காசிநாதன், அவரது அண்ணன் மனைவியையும், மருமகனையும் தொடர்புபடுத்திப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் கருணாநிதி, தம்பியை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தம்பி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறை! - திருச்சி மத்திய சிறை
அரியலூர்: சொந்தத் தம்பியைக் கொன்ற வழக்கில் மேலப்பழுவூர் கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதிக்கு நீதிமன்றம் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தம்பியைக் கொன்ற அண்ணன் - 5 ஆண்டுகள் சிறை!
இது தொடர்பாக கருணாநிதி, மனைவி ரஞ்சிதம், மருமகன் மணிகன்டன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமார், குற்றவாளி கருணாநிதிக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், 31 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், குற்றவாளியின் மனைவி, மருமகனை விடுதலை செய்யவும் உத்தரவிட்டார்.