தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனா எதிரொலி: இங்கிலாந்து செல்ல தயக்கம் காட்டும் வெஸ்ட் இண்டீஸ்! - ஐபிஎல் 2020

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து-வேஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து மூன்று வெஸ்ட் இண்டிஸ் வீரர்கள் பங்கேற்க விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Three Windies players refuse to travel for England series
Three Windies players refuse to travel for England series

By

Published : Jun 3, 2020, 9:30 PM IST

கரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியுள்ளன. குறிப்பாக மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் நடைபெறவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்தில் கரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்ததையடுத்து இந்தத் தொடர் நடைபெறும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தெரிவித்திருந்தன. மேலும் இந்தத் தொடருக்கான புதிய தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே இங்கிலாந்து செல்லவிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணையிலிருந்து கரோனா வைரஸ் அச்சுறுத்தலை காரணம்காட்டி திடீரென மூன்று வீரர்கள் விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் மீண்டும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெருவது கேள்விக்குறியகியுள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வரும் ஜூன் 9ஆம் தேதி இங்கிலாந்துக்கு வருகை தரவிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details