இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் வாகன விற்பனை நிறுவனமான கார்ஸ் 24 நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் இந்நிறுவனத்தின் தூதராகவும், பங்குதாரராகவும் இருப்பார் எனதெரியவந்துள்ளது.
புதிய நிறுவனத்தில் இணையும் கிரிக்கெட்வீரர் தோனி! - business news
குருக்ராம்: கார்ஸ் 24 நிறுவனத்தின், பங்குதாரராகவும், தூதராகவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இணைந்துள்ளார்.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் விக்ரம் சோப்ரா கூறுகையில், ''கார்ஸ் 24 நிறுவனத்திற்கு தோனி வருவதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், ஹீரோவாகவும் திகழ்கிறார். பல ஆண்டுகளாக அவர் மீது வீசப்படும் ஒவ்வொரு பிரச்னைக்கும் தொடர்ந்து தீர்வுகளைக் காணும் அவரது திறன் அவரை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற கேப்டனாக ஆக்கியுள்ளது. மேலும் அவர் எங்கள் நிறுவனத்துடன் இணைத்திருப்பது மிகவும் சிறப்பானது என்றார்''.