தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 3, 2020, 7:25 PM IST

ETV Bharat / sports

கிளப் லோகோவுடன் முகக்கவசத்தை வெளியிட்ட பார்சிலோனா அணி

ஸ்பெயின்: கரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக முகக்கவசங்களை வடிவமைத்து, விற்பனை செய்து வருகிறது பார்சிலோனா கால்பந்து கிளப்.

Barcelona football club
Facemask with Barcelona logo

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தாக்கம் இருப்பதால் தற்போது முகக்வசம் அணிவது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நிதிச்சுமையில் சிக்கித் தவிக்கும் பல்வேறு கால்பந்து கிளப் நிர்வாகம் இதை வாய்ப்பாக பயண்படுத்தி தங்கள் அணியின் அடையாளத்துடன் முகக்கவசங்களை வடிவமைத்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளன.

அந்த வகையில் உலக அளவில் புகழ்பெற்ற கால்பந்து கிளப்-ஆன பார்சிலோனா மூன்று மாடல்களுடன் முகக்கவசங்களை வடிவமைத்துள்ளது. இவை மஞ்சள் நிறம், நான்கு சிவப்பு கோடுகளுடன் கத்தோலிக்க பிராந்திய கொடியை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளன.

இதுகுறித்து பார்சிலோனா கால்பந்து கிளப் செய்தித் தொடர்பாளர் ஜோசப் விவ்ஸ் கூறியதாவது:

உலகம் முழுவதும் இருக்கும் எங்கள் அணியின் ஆதரவாளர்கள் எங்களது கொடியுடன் கூடிய முகக்கவசத்தை அணிய வேண்டும் என எண்ணி இப்படியொரு முயற்சி மேற்கொண்டுள்ளோம். இந்த முகக்கவசத்தை பிரபலப்படுத்துவதற்காக மட்டும் பார்சிலோனா அணி வீரர்கள் இதை அணியப்போவதில்லை. எங்கள் சமூகம் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தவும் இவ்வாறு முகக்கவசத்தை வடிவமைத்துள்ளோம் என்றார்.

இந்த முகக்கவசங்கள் பார்சிலோனாவின் சில அதிகாரப்பூர்வ கடைகளிலும் மற்ற ஸ்பெயின் நகரங்கள் மற்றும் இணையதளத்திலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

18 யூரோ மதிப்புள்ள இந்த முகக்கவசம் கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக அனைத்து பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை 40 முறை வரை கழுவி மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பார்சிலோனாவை பின்பற்றி பேடிஸ், ரியல் சோசிடாட் போன்ற மற்ற கிளப்களும் தங்களது அணிக்கென பிரத்யேகமாக முகக்கவசம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளனவாம்.

கிளப் லோகோவுடன் முகக்வசத்தை வெளியிட்ட பார்சிலோனா அணி

ABOUT THE AUTHOR

...view details