டோக்கியோ ஒலிம்பிக்கில் விதிமுறைகளை பின்பற்றாத இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவர் மீது மூன்று புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
- ஒலிம்பிக் கிராமத்தில் மற்ற இந்திய வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட ஒத்துழைக்கவில்லை
- இந்திய அணியின் அலுவல்பூர்வ ஸ்பான்சரான ஷிவ் நரேஷின் ஜெர்சி ஆடையை அணிய மறுத்து, நைக் லோகோ இடம்பெற்ற ஆடையை அணிந்தார்.
- இந்திய வீராங்கனைகள் சோனம், அன்ஷு மாலிக், சீமா பிஸ்லா ஆகியோர் தங்கிய அறைகளுக்கு அடுத்த அறையில் தங்கிட மறுப்பு தெரிவித்தது.
மேலே குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க ஆகஸ்ட் 16ஆம் தேதிவரை வினேஷ் போகத்துக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 53 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வினேஷ் போகத், காலிறுதி போட்டியில் தோல்வியுற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், " ஹங்கேரியில் பயிற்சி பெற்ற வீராங்கனை என்பதால், தன்னை இந்திய வீராங்கனையாக நினைத்துக் கொள்ளாமல் வெளிநாட்டு வீரரைப் போல வினேஷ் நடந்துகொண்டார்.