தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Tokyo Paralympics: தென் கொரிய வீராங்கனையிடம் வீழ்ந்தார் சோனல்பென் படேல் - டோக்கியோ பாரா ஒலிம்பிக்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை சோனல்பென் படேல் 1-3 என்ற செட் கணக்கில் தென் கொரிய வீராங்கனையிடம் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தார்.

சோனல்பென் படேல்
சோனல்பென் படேல்

By

Published : Aug 26, 2021, 10:15 PM IST

டோக்கியோ:டோக்கியோ: 2020 டோக்கியோ கோடைக்கால ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெற்றது. இத்தொடரில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்று ஏழு பதக்கங்களை வென்றனர். நீரஜ் சோப்ரா தடகளப் பிரிவான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று சிறப்பித்தார்.

சம்மர் ஒலிம்பிக் முன்னதாக நிறைவடைந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் நேற்று முன்தினம் (ஆக. 24) தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் ஒன்பது விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

சோனல்பென் படேல் ஏமாற்றம்

இதையடுத்து, நேற்று (ஆக. 25) நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையருக்கான குரூப் பிரிவு போட்டியில் சோனல்பென் படேல், பவினாபென் படேல் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

இந்நிலையில், டேபிள் டென்னிஸ் சி-3 பிரிவில் இடம்பெற்றுள்ள சோனல்பென் படேல், தென் கொரிய வீராங்கனை லீ மி-ங்யூ உடன் இன்று (ஆக. 26) மோதினார். அரை மணிநேரம் நடைபெற்ற இப்போட்டியில், தென் கொரிய வீராங்கனை 3-1 (10-12, 11-5, 11-3, 11-9) என்ற செட் கணக்கில் சோனஸ்பென் படேலை வீழ்த்தினார்.

முன்னதாக, இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில், பிரிட்டனின் மேகன் ஷாக்லெட்டானை வென்று இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் படேல் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் வீரர் செய்தது குற்றமில்லை - சர்ச்சைக்கு நீரஜ் முற்றுப்புள்ளி!

ABOUT THE AUTHOR

...view details