டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பாரா உயரம் தாண்டுதல் போட்டியின் டி-47 பிரிவில் நடைபெற்ற பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் பங்கேற்றார்.
தகர்ந்தது ஆசிய சாதனை
இப்போட்டியில், தனது முதல் முயற்சிலேயே 2.02 மீட்டர் உயரத்தைத் தாண்டிய நிஷாத், அடுத்த முயற்சியில் 2.06 மீட்டரை இரண்டு முயற்சிகள் எடுத்து தாண்டினார். 2.06 மீட்டர் உயரத்தைத் தாண்டியதின் மூலம் ஆசிய சாதனையை நிஷாத் முறியடித்தார்.