ஒலிம்பிக் தொடரின் 14ஆம் நாளான இன்று (ஆக.05), இந்திய வீரர்கள் மல்யுத்தம், ஆடவர் ஹாக்கி அணி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.
அதில், மகளிருக்கான 56 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் 'மின்னல்வேக வீராங்கனை' என அழைக்கப்படும் வினேஷ் போகத் பங்கேற்றார்.
முன்னதாக அவர், காலிறுதி தகுதிச் சுற்றில், ஸ்வீடன் நாட்டின் மூத்த மல்யுத்த வீராங்கனையான சோபியா மக்டலேனா மாட்சனை வீழ்த்தி முன்னேறினார்.
அதைத்தொடர்ந்து, பெலாரஸ் நாட்டு மல்யுத்த வீரங்கனை வனேசா கலட்ஜின்ஸ்காயா உடன் மோதினார். ஆரம்பம் முதலே, பின்னடைவை எதிர்கொண்ட வினேஷ் போகத் 9-3 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:41 வருட தவம்: ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா