டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் மல்யுத்தம் 57கிலோ ஃப்ரீ-ஸ்டைல் பிரிவின் இறுதிப்போட்டி இன்று (ஆக.5) நடைபெற்றது. இதில், இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா ரஷ்ய வீரர் சவூர் உகுவேவ் உடன் மோதினார்.
வெள்ளி வென்றார் ரவிக்குமார்; இந்தியாவிற்கு ஐந்தாவது பதக்கம்! - INDIAN WRESTLING MEDAL
16:36 August 05
ஒலிம்பிக் மல்யுத்தம் 57கிலோ ஃப்ரீ-ஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா ரஷ்ய வீரரிடம் தோல்வியடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இது நடப்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் ஐந்தாவது பதக்கம்.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 4-7 என்ற புள்ளிக்கணக்கில் ரவிக்குமார் தாஹியா, சவூரிடம் வீழ்ந்தார். இதன்மூலம், ரவிக்குமார் வெள்ளி பதக்கத்தை உறுதிசெய்ததை அடுத்து, நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியா இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் என மொத்தம் ஐந்து பதக்கத்தைப் பெற்றுள்ளது.
மல்யுத்தத்தில் ஆறாவது பதக்கம்
2012 லண்டன் ஒலிம்பிக்கில் சுஷில் குமார் பெற்ற வெள்ளிப் பதக்கத்தை அடுத்து ரவிக்குமார் தற்போது மல்யுத்தத்தில் வெள்ளி வென்றுள்ளார். ஒலிம்பிக் மல்யுத்த வரலாற்றில் இந்தியா பெறும் ஆறாவது பதக்கம் இது என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: 41 வருட தவம்: ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா