டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 57 கிலோ மல்யுத்தப் பிரிவில் கொலம்பியாவின் எடர்டோ டைகரெரோஸை வீழ்த்தி இந்தியாவின் ரவி தாஹியா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ரவி தாஹியா ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இரண்டாம் சுற்றில் மிகச் சிறப்பாக விளையாடி 13-2 என்ற கணக்கில் வெற்றியை தன் வசமாக்கினார்.
இந்நிலையில் இன்னும் சில நிமிடங்களில் நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் அவர் பல்கேரியாவின் வங்கேலோவை எதிர்கொள்கிறார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் நபரான ரவி தாஹியா, ஆசிய மல்யுத்த போட்டியில் இரண்டு முறை வெற்றி வாகை சூட்டியவர் ஆவார். கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் 57 கிலோ எடைப்பிரிவில் அவர் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஈட்டி எறிதல் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா