தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Tokyo Olympics: மீராபாய் சானுக்கு ரூ. 1 கோடி பரிசுத் தொகை! - மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்

டோக்கியா ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.

Tokyo Olympics:
Tokyo Olympics

By

Published : Jul 25, 2021, 7:40 AM IST

டெல்லி: டோக்கியா ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி தொடங்கின. நேற்றைய (ஜூலை 24) இரண்டாம் நாள் போட்டியில் பளுதூக்குதல் பெண்கள் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.

வெள்ளிப்பதக்கம் வென்ற இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மீராபாய் பல தடைகளைத் தாண்டி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இந்நிலையில், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் அவரைப் பாராட்டியுள்ளார். மேலும், அவருக்கு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

மணிப்பூரில் உள்ளவர்கள் எனக்காக பிராத்தனை செய்தார்கள். நான் இப்போது வெள்ளி பதக்கம் வென்றுள்ளளேள். எனக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று மீராபாய் சானு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மீராபாய் சானு: 2016 தோல்வி முதல் 2021 வெள்ளிவரை - 'நெவர் எவர் கிவ் அப்' கதை

ABOUT THE AUTHOR

...view details