தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியா ஒலிம்பிக்: நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் ஏமாற்றம் - மானா பட்டேல்

இந்திய நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் 100 மீட்டர் நீச்சல் போட்டியில் 18ஆவது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.

மானா பட்டேல், மானா பட்டேல் தோல்வி
Tokyo Olympics: Maana Patel fails to qualify for 100m women's backstroke pre-quarter

By

Published : Jul 25, 2021, 4:51 PM IST

டோக்கியோ (ஜப்பான்):ஒலிம்பிக் தொடரின் பெண்கள் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் நீச்சல் ஹீட்ஸ் போட்டி இன்று (ஜூலை 25) நடைபெற்றது.

ஜஸ்ட் மிஸ்

இதில், இந்தியா சார்பாக பங்கேற்ற மானா பட்டேல், 100 மீட்டரை 1:05.20 விநாடிகளில் நேரத்தில் கடந்தார். 16 இடங்களுக்குள் இலக்கை அடைந்தால் அடுத்து சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில், மானா பட்டேல் 18ஆவது இடத்தை பிடித்து ஏமாற்றமளித்தார்.

இதே சுற்றில் மானா பட்டேல் உடன் மோதிய ஜிம்பாப்வே நாட்டின் டொனாட்டா கட்டாய் 1:02.73 விநாடிகளில் கடந்து அந்த பிரிவில் முதலிடம் பிடித்தார்.

இந்தியா இன்று

முன்னதாக, ஒலிம்பிக் தொடரில் இன்று இந்தியா சார்பில் பி.வி. சிந்து, மேரி கோம், துடுப்பு படகுப்போட்டியில் அரவிந்த் சிங், அர்ஜூன் லால், டேபிள் டென்னிஸில் மனிகா பத்ரா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறி ஆறுதல் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை: மனிஷ் கௌசிக் தோல்வி

ABOUT THE AUTHOR

...view details