இந்தியாவிற்காக டேபிள் டென்னிஸில் மூன்று முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார் சரத் கமல். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான சரத் கமலுக்கு தற்போது வயது 39. டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் இரண்டு சுற்றுகளை கடந்து மூன்றாவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான மா லாங்கை எதிர்த்து, கடினமாக போராடி வீழ்ந்தார்.
விளையாட்டு வீரனுக்கு வெற்றித் தோல்வியைவிட இறுதிவரை போராடுவதே முக்கியம். அந்த போராட்டத்தைதான் அன்று சரத் வெளிக்காட்டினார். அந்த போட்டி, அவரின் எதிர்கால திட்டம் குறித்து 'ஈடிவி பாரத்' உடனான கலந்துரையாடலில் அவர் மனம் திறந்துள்ளார்.
லாங் உடனான போட்டியை நீங்கள் எப்படி அணுகுனீர்கள்?
ஒலிம்பிக் முன்னேரே இத்தொடர் கடினமாக இருக்கும் என்பது அறிந்திருந்தேன். இரண்டாவது சுற்றில் கடந்த 15 ஆண்டுகள் நான் வெற்றி பெற்றிராத அபோலோனியாவுடனும், மூன்றாவது சுற்றில் நடப்பு சாம்பியன் மா லாங் உடனும் மோத வேண்டியிருந்தது. என்னுடைய வெற்றி வாய்ப்பு பாதிக்கு பாதி என்று நினைத்துதான் ஆட்டத்திற்கே சென்றேன். யார் எதிர்த்து விளையாடுகிறார் என்பது குறித்து என்பதில் எனக்கு பிரச்னையில்லை.
நான் இங்கு ஜெயிக்க வந்திருக்கிறேன். என்னுடைய இயல்பான ஆட்டத்தை இங்கு வெளிப்படுத்தினேன். என்னை வீழ்த்த வேண்டுமென்றால் என்னைவிட எதிராளி சிறப்பாக விளையாட வேண்டும். அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்.
ஆம்... லாங் உடனான போட்டியில் மூன்றாம் செட்டை வென்றிருந்தால், நான் ஆட்டத்தை வென்றிருக்க வாய்ப்பிருந்தது. ஆனால், துர்திஷ்டவசமாக அந்த செட்டை இழந்துவிட்டேன்.
அந்தப் போட்டியில், என்னால் முடிந்த அளவிற்கு அழுத்தத்தைக் கொடுத்து அவரை முழுமையாக கட்டம் கட்டினேன். அதன்பின் அவர் போட்டியை தனதாக்கிக் கொண்டார். இருப்பினும், அவருக்கு அழுத்தம் கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியையே அளித்தது.