தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

TOKYO OLYMPICS: தங்கமகனால் முன்னேறியது இந்தியா! - GOLD IN ATHELETICS

ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை அடுத்து, இந்தியா பதக்கப்பட்டியலில் 65ஆவது இடத்தில் இருந்து 47ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

By

Published : Aug 7, 2021, 6:33 PM IST

Updated : Aug 7, 2021, 6:46 PM IST

டோக்கியோ: கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நாளையுடன் (ஆக.8) நிறைவடைகிறது. இந்நிலையில், தொடரின் 16ஆவது நாளான இன்று (ஆக.7) ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வென்ற தங்கம், மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா வென்ற வெள்ளி என இந்தியாவுக்கு இன்று இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து, டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் நேற்று (ஆக.6) இந்தியா 65ஆவது இடத்தில் இருந்தது. தற்போது நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை அடுத்து, இந்தியா கிடுகிடுவென 47ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

டோக்கியோவில் இதுவரை இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: ஈட்டி தூக்கி நின்னான் பாரு.. இவன வெல்ல யாரு.... சரித்திர நாயகன் நீரஜ் சோப்ரா!

Last Updated : Aug 7, 2021, 6:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details