தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Tokyo Olympics : தமிழ்நாடு வீரர் சத்தியன் ஞானசேகரன் தோல்வி

டேபிள் டென்னிஸ் ஒற்றையர் ஆட்டத்தில் தமிழ்நாடு வீரர் சத்தியன் ஞானசேகரன் போராடி தோல்வியடைந்தார்.

ஞானசேகரன் சத்தியன்
ஞானசேகரன் சத்தியன்

By

Published : Jul 25, 2021, 11:40 AM IST

Updated : Jul 25, 2021, 1:35 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இரண்டாம் சுற்றுப் போட்டியில் தமிழ்நாடு வீரர் சத்தியன் ஞானசேகரன் ஹாங் காங் வீரர் சியு ஹாங்கை எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் முதல் செட்டை ஹாங் காங் வீரரிடம் 7-11 என்று இழந்த சத்தியன், அடுத்த மூன்று செட்களை 11-7, 11-4, 11-5 என வென்றார்.

தொடர்ந்து மூன்று செட்களை இழந்தாலும் மனம் தளராத ஹாங் காங் வீரர் சியு 9-11, 10-12 என ஐந்தாவது மற்றும் ஆறாவது செட்களை கைப்பற்றினார்.

இருவரும் 3-3 என்ற செட் கணக்கில் சமநிலையில் இருந்ததால், ஆட்டத்தை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் அனல் பறந்தது. இறுதி செட்டை 11-6 என்ற கணக்கில் ஹாங் காங் வீரர் சியு கைப்பற்றினார்.

இதையடுத்து 4-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து ஒலிம்பிக்கிலிருந்து தமிழ்நாடு வீரர் சத்தியன் வெளியேறினார். ஹாங்காங் வீரர் ஹாங்கிடம் சத்தியன் தோற்பது இதுவே முதல்முறை.

இதையும் படிங்க:Tokyo Olympics: பி வி சிந்து அபார வெற்றி

Last Updated : Jul 25, 2021, 1:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details