டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.
8ஆம் நாளான இன்று, வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகாவின் குமாரி ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் அவர் கொரிய வீராங்கனை ஆங் சான் (An San)-ஐ எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் துல்லியத் தாக்குதல் தொடுத்த ஆங் சாங் 6-0 என்ற கணக்கில் தீபிகா குமாரியை தோற்கடித்தார்.
20 வயதான ஆங் சான் 2019இல் நடந்த பயிற்சி ஆட்டத்திலும் தீபிகா குமாரியை வீழ்த்தியிருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டிகளில் கொரிய வீரர்- வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : TokyoOlympics: வில்வித்தை தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி!