தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Tokyo Olympics: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! - பேட்மிண்டன்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் பி.வி. சிந்து.

PV Sindhu
PV Sindhu

By

Published : Jul 29, 2021, 7:40 AM IST

டோக்கியோ : 20204ஆம் ஆண்டின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகின்றன.

7ஆம் நாளான இன்று (ஜூலை 29) பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து, டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட் (Mia Blichfeldt) எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியை பி.வி. சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் தனதாக்கினார். முதல் ஆட்டத்தை 21 நிமிடங்களில் வென்ற சிந்து, அடுத்த ஆட்டத்தையும் ஆக்ரோஷமாக ஆடி வெற்றியை ருசித்தார்.

சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் பி.வி. சிந்து 7ஆவது இடத்திலும், டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட் (Mia Blichfeldt) 12ஆவது இடத்திலும் உள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : Tokyo Olympics: பி.வி. சிந்து வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details