தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Tokyo Olympics 14ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கிய போட்டிகள்! - Tokyo Olympics

ஒலிம்பிக் தொடரின் 14ஆம் நாளான ஆக.5ஆம் தேதி இந்திய வீரர்கள் பங்கேற்கும் முக்கியப் போட்டிகள் குறித்த தொகுப்பு இதோ.

Tokyo Olympics 14ஆவது நாள்
Tokyo Olympics 14ஆவது நாள்

By

Published : Aug 4, 2021, 9:55 PM IST

டோக்கியோ: இந்தியாவின் முக்கிய போட்டிகளான மல்யுத்தத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா மோதும் இறுதிப்போட்டி, ஹாக்கி அணி மோதும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி ஆகியவை ஒலிம்பிக் தொடரின் 14ஆவது நாளான ஆக.5ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

ரவிக்குமார் தாஹியா - மல்யுத்தம்

தங்கமோ வெள்ளியோ ஏற்கெனவே இந்தியாவிற்கான நான்காவது பதக்கத்தை உறுதி செய்துவிட்ட ரவிக்குமார் தாஹியா, ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நாளைய போட்டியில் ரஷ்ய வீரர் ஸவுர் உகுவேவ் உடன் மோதவிருக்கிறார்.

வினேஷ் போகாட் - மல்யுத்தம்

மகளிர் 56கிலோ எடைப்பிரிவில் மின்னல்வேக வீராங்கனையான வினேஷ் போகாட் டோக்கியோவில் ஆக.5இல் தனது முதல் போட்டியை விளையாட இருக்கிறார். ஆசிய சாம்பியனான வினேஷ் போகாட் இந்தியாவின் பெரும் பதக்க நம்பிக்கையாக இருக்கிறார்.

ஆடவர் ஹாக்கி அணி

டோக்கியோவில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியுடைய பயணம் நாளையுடன் நிறைவடைய இருக்கிறது. நேற்று (ஆக.3) ஜெர்மனி அணிக்கு எதிரான போட்டியில் 2-5 என்ற மோசமாக இந்தியா தோற்ற நிலையில், ஜெர்மனி அணி உடனான நாளைய போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

தீபக் புனியா - மல்யுத்தம்

அமெரிக்க வீரர் டேவிட் டெய்லரிடம் இன்று (ஆக.4) தோல்வியுற்ற இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா, 86கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மோதுகிறார்.

இதையும் படிங்க: Tokyo Olympics 14ஆவது நாள் அட்டவணை: இந்தியாவிற்கான போட்டிகள் எப்போது?

ABOUT THE AUTHOR

...view details