தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Tokyo Olympics 13ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கியப் போட்டிகள்!

ஒலிம்பிக் தொடரின் 13ஆம் நாளான நாளை (ஆக.4) இந்திய வீரர்கள் பங்கேற்கும் முக்கியப் போட்டிகள் குறித்த தொகுப்பு...

இந்தியாவிற்கான முக்கிய போட்டிகள்
இந்தியாவிற்கான முக்கிய போட்டிகள்

By

Published : Aug 3, 2021, 10:07 PM IST

டோக்கியோ: இந்தியாவின் முக்கியப் போட்டிகளான நீரஜ் சோப்ரா பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டி, லவ்லினா பங்கேற்கும் குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டி, மகளிர் ஹாக்கி அரையிறுதிப்போட்டி ஆகியவை ஒலிம்பிக் தொடரின் 13ஆவது நாளான நாளை (ஆக.4) நடைபெற இருக்கிறது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி

நடப்பு ஒலிம்பிக் தகுதிச்சுற்று ஆட்டங்களில் முதலில் சொதப்பி வந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, அயர்லாந்து, ஜப்பான் அணியை வீழ்த்தி முதல் முறையாக காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. பின்னர், காலிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை மண்ணைக் கவ்வ வைத்தது.

இந்நிலையில், நாளை இந்திய அணி அர்ஜென்டினா அணியை சந்திக்க இருக்கிறது.

லவ்லினா போர்கோஹெய்ன் - குத்துச்சண்டை

லவ்லினா ஏற்கெனவே இந்தியாவிற்கு பதக்கம் உறுதி செய்துவிட்ட நிலையில், அவர் அரையிறுதியில் உலக சாம்பியனான துருக்கி நாட்டைச் சேர்ந்த புஸ்னேஸ் சுர்மேனேலி உடன் மோத இருக்கிறார். இந்த போட்டியை வெல்வதன் மூலம் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை இறுதிப்போட்டிக்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெறுவார், லவ்லினா.

நீரஜ் சோப்ரா - ஈட்டி எறிதல்

23 வயதான நீரஜ் சோப்ரா இந்தியாவின் பதக்க நம்பிக்கைப் பட்டியலில் முதன்மையானவர். உலகத் தரவரிசையில் நான்காம் நிலையில் இருக்கும் நீரஜ் சோப்ரா, தடகளப்போட்டிகளில் இந்தியாவிற்குப் பதக்கம் வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சுதந்திர தின விழாவில் இந்திய ஒலிம்பிக் போட்டியாளர்கள்; பிரதமர் திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details