டோக்கியோ:ஒலிம்பிக் தொடரின் இரண்டாவது நாளில் (ஜூலை 24) இந்தியாவிற்கு மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை பெற்று தந்தார். அதன்பின்னர், பத்தாவது நாளில்தான் (ஆக.1) இந்தியாவிற்கு அடுத்த பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
சிந்து பெற்ற வெண்கலத்தால் ஒரு இடம் முன்னேறிய இந்தியா; சீனா முதலிடம்
பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றதை அடுத்து, இந்தியா ஒரு இடம் முன்னேறி 59ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
Day 10 medal tally
தற்போது பதக்கப் பட்டியலில், சீனா 24 தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கலம் என 51 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இன்று மட்டும் சீனா 3 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, ஜப்பான் 20 தங்கம், அமெரிக்கா 17 தங்கம் என முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கதுடன் 59ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஒன்பதாம் நாள் பதக்கப் பட்டியல்