டோக்கியோ: ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் ப்ரீ-ஸ்டைல் 65கிலோ எடைப்பிரவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று (ஆக.7) நடைபெற்றது. இதில், இந்திய வீரர் பஜ்ரங் புனியா, கஜகஸ்தான் வீரர் தவ்லத் நியாஸ்பெக்கோவ் (Daulet Niyazbekov) உடன் மோதினார்.
TOKYO OLYMPICS: வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா! - tokyo olympics wrestling
16:21 August 07
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா, கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
பைல்வான் பஜ்ரங்
இப்போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே பஜ்ரங் புனியா எதிராளியை மடக்கி பிடித்து புள்ளிகளைப் பெறத் தொடங்கினார். இதன்மூலம், 8-0 என்ற புள்ளிக்கணக்கில் தவ்லத்தை வீழ்த்தி பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கத்தை வென்றார். மல்யுத்தத்தில் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்றிருந்தார்.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் என 6 பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் கோல்ஃப் போட்டி: அதிதி அசோக் அதிர்ச்சித் தோல்வி