தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

லவ்லினா ஆடும் ஒலிம்பிக் போட்டியைக் காண அஸ்ஸாம் சட்டப்பேரவை ஒத்திவைப்பு - தங்கம் வெல்லும் போராட்டத்தில் லவ்லினா

அஸ்ஸாமைச் சேர்ந்த வீராங்கனை லவ்லினா, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அரையிறுதிப் போட்டியைக் காண அந்த மாநிலப் பேரவை 20 நிமிடங்கள் இன்று ஒத்திவைக்கப்படுகிறது.

Lovlina's match
லவ்லினா

By

Published : Aug 4, 2021, 10:41 AM IST

Updated : Aug 4, 2021, 11:21 AM IST

திஸ்பூர்:டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்குப் பதக்கம் வென்று கொடுத்துள்ள மீரா பாய், பி.வி. சிந்து ஆகியோருக்கு அடுத்து, பதக்கத்தை உறுதிசெய்தவர் லவ்லினா. இவர் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் விளையாடிவருகிறார்.

அரையிறுதிக்கு முன்னேறி அவர் ஏற்கெனவே பதக்கத்தை உறுதி செய்துவிட்ட நிலையில், இன்று முன்னாள் உலகச் சாம்பியனான துருக்கியின் பூசெனஸ் சர்மினெலியுடன் (Busenaz Surmeneli) மோதுகிறார்.

இந்தப் போட்டியில் அவர் வென்றால், ஒலிம்பிக் குத்துச்சண்டை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை லவ்லினா பெறுவார்.

அஸ்ஸாம் சட்டப்பேரவை ஒத்திவைப்பு

இந்நிலையில் அவரது சொந்த மாநிலமான அஸ்ஸாமில் லல்வினா பங்கேற்கும் போட்டியைக் காண அந்த மாநிலப் பேரவை 20 நிமிடங்கள் இன்று ஒத்திவைக்கப்படுகிறது.

நாட்டிற்காகத் தங்கப் பதக்கம் வெல்ல களமிறங்கும் லவ்லினா இதில் வெற்றிபெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார். மாறாக தோல்வி கண்டால் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றுவார்.

இதையும் படிங்க: மல்யுத்தம் - அரையிறுதியில் தீபக் பூனியா

Last Updated : Aug 4, 2021, 11:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details