டோக்கியோ ஒலிம்பிக்கின் ஜிம்னாஸ்டிக் பிரிவின் தனி நபர் பிரிவின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும் போட்டிகள் இன்று(ஜூலை.25) நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பிரணதி நாயக் பங்கேற்றார்.
நான்கு பிரிவுகளில் மொத்தம் 42.565 புள்ளிகளை பெற்ற பிரணதி நாயக், 12ஆவது இடத்தை மட்டுமேதான் பிடிக்க முடிந்தது. இத்தாலி வீராங்கனை ஆலிஸ் டிமாடோ 54.199 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார். ஜப்பான் நாட்டை சேர்ந்த மை முரகாமி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.