தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் - பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்கள் குறித்து ஒரு பார்வை.

டோக்கியோ ஒலிம்பிக்
டோக்கியோ ஒலிம்பிக்

By

Published : Aug 8, 2021, 10:13 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என ஏழு பதக்கங்களை வென்றுள்ளது.

நீரஜ் சோப்ரா - தங்கம்

தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் அதுவும் தங்கப் பதக்கத்தை வென்று தந்தவர் 23 வயது நீரஜ் சோப்ரா. ஹரியானா மாநிலம் காந்தரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகனான நீரஜ், இந்திய ராணுவத்தில் சுபேதாராக உள்ளார்.

ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீ தூரம் வீசி இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத்தந்தார் நீரஜ்.

நீரஜ் சோப்ரா

மீரா பாய் - வெள்ளி

ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்தவர் மணிப்பூரைச் சேர்ந்த மீரா பாய். 26 வயது மீரபாய் தனது இளம் வயதில் விறகு வெட்டித்தான் வாழ்க்கையை நடத்தினார்.

2017ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்ற மீரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் மொத்தம் 202 கிலோ தூக்கி வெள்ளி வென்றார்.

மீரா பாய்

ரவி குமார் - வெள்ளி

ஹரியானா மாநிலம நஹரி கிரமத்தைச் சேர்ந்த 23 வயது மல்யுத்த வீரர் ரவிகுமார் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரவிகுமார் டோக்கியோ ஒலிம்பிக்கில், 57 கிலோ பிரிவு வெள்ளி வென்றார்.

ரவி குமார்

பி வி சிந்து - வெண்கலம்

டோக்கியோ ஒலிம்பிக் தொடங்கியதிலிருந்தே அனைவரின் கவனமும் பி வி சிந்துவின் மீது தான் இருந்தது. 2016 ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதியில் டாய் சு யிங்கிடம் தோல்வியடைந்தார்.

இருப்பினும் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்ட்ததில் வெற்றி பெற்று அடுத்ததடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.

பி வி சிந்து

லவ்லினா போர்கோஹியான் - வெண்கலம்

அசாம் மாநிலத்தின் பரோ முகியா கிராமத்தைச் சேர்ந்த 23 வயது லவ்லினா, டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை முன்னேறி வெண்கலம் வென்றார்.

இதன்மூலம் விஜேந்தர் சிங், மேரி கோம்முக்கு அடுத்து குத்துச்சண்டையில் பதக்கம் வெல்லும் மூன்றாவது இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.

லவ்லினா போர்கோஹியான்

பஜ்ரங் பூனியா - வெண்கலம்

ஹரியானாவைச் சேர்ந்த 27 வயதான பஜ்ரஜ் பூனியாவின் தந்தை, சகோதரர் என அனைவரும் மல்யுத்த வீரர்களே. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியா, ஒலிம்பிக் நிறைவு விழாவில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் பெருமையை பெற்றார்.

பஜ்ரங் பூனியா

அத்துடன் ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. 41 ஆண்டுகளுக்குப் பின் ஹாக்கியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை.

ஆடவர் ஹாக்கி அணி

இதையும் படிங்க:இந்தியா 2, சீனா 274 - ஒலிம்பிக் உணர்த்தும் பாடம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details