சென்னை : டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நாட்டுக்கு தங்க பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதயம் கனிந்த வாழ்ந்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “இந்தியாவின் விளையாட்டுக்கு இன்று ஒரு மறக்கமுடியாத நாள். ஒலிம்பிக் தடகளத்தில் நாட்டின் 120 ஆண்டுகால காத்திருப்பை தங்கம் வென்று முடிவுக்குகொண்டுவந்த நீரஜ் சோப்ராவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள். நீங்கள் 100 கோடி இந்தியர்களின் நெஞ்சில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் ஒரு உண்மையான தேசிய நாயகன்” எனத் தெரிவித்துள்ளார்.