டோக்கியோ பாரா ஒலிம்பிக்கின் துப்பாக்கிச் சுடுதல் பி4 கலப்பு 50 மீ பிஸ்டல் பிரிவில், இந்திய வீரர் மணிஷ் நார்வால் தங்கப் பதக்கம் வென்றார். சிங்ராஜ் அதானா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதனைத் தொடர்ந்து மணிஷ் நார்வால் மற்றும் சிங்ராஜ் அதானாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், ஹரியானா அரசு பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ரூ.6 கோடி பரிசுத்தொகையும், வெள்ளி வென்ற சிங்ராஜ்க்கு ரூ.4 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, பதக்கம் வென்ற இரண்டு வீரர்களுக்கும் அரசு வேலை உறுதி எனவும் தெரிவித்துள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 34ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல், இந்த இரண்டு வீரர்களையும் வாழ்த்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், பாரதப் பிரதமர் மோடி.
இதையும் படிங்க:இந்தியா பதக்க வேட்டை: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம், வெள்ளி