தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வெள்ளி மங்கை மீராவுக்கு ரூ.2 கோடி, பணி உயர்வு - ரயில்வே அமைச்சர் அறிவிப்பு - மீரா பாய் சானு

மீரா பாய் சானுவுக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகையும், அவர் பணிபுரியும் வட கிழக்கு எல்லை ரயில்வேயில் பணி உயர்வு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.

Mirabai Chanu
Mirabai Chanu

By

Published : Jul 27, 2021, 6:05 AM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த வெள்ளி மங்கை மீரா பாய்க்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகின்றன. மீரா பாய் நேற்று(ஜூலை 26) நாடு திரும்பிய நிலையில், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அவரை நேரில் சந்தித்து பாராட்டினார்.

அத்துடன் ரயில்வே ஊழியரான மீரா பாய் சானுவுக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகையும், அவர் பணிபுரியும் வட கிழக்கு எல்லை ரயில்வேயில் பணி உயர்வும் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

தனது திறமை, கடின உழைப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் கோடிக்கணக்கானோருக்கு மீரா பாய் வழிகாட்டியாக உள்ளதாக அமைச்சர் வைஷ்னவ் புகழாரம் சூட்டியுள்ளார்.

மனிப்பூரைச் சேர்ந்த பலுத்தூக்கும் வீராங்கனையான மீரா பாய், டோக்கியோ ஒலிப்பிக்கில் 49 கிலோ எடை பிரிவில் வெள்ளி வென்றார்.

இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக் 5ஆவது நாள்: இந்தியா பங்கேற்கும் போட்டி அட்டவணை

ABOUT THE AUTHOR

...view details