தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாரிஸ் ஒலிம்பிக்தான் அடுத்த இலக்கு- பி.வி. சிந்து

2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என ஒலிம்பிக் நாயகி பி.வி. சிந்து தெரிவித்துள்ளார்.

PV Sindhu
பி.வி. சிந்து

By

Published : Aug 5, 2021, 3:09 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சீன வீராங்கனை பிங் ஜியோவோவை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

26 வயதான சிந்து இந்த வெற்றியின் மூலம், இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இவர் அடுத்ததாக பாரிஸூல் 2024இல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பி.வி. சிந்து செய்தியாளர் சந்திப்பு

அவர் பேசுகையில், " எனக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்த குடும்ப உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்களுக்கு மிக்க நன்றி. இந்த வெற்றியில் உங்களுக்குப் பங்கிருக்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவு நனவாகியுள்ளது. எனது அடுத்த இலக்கு 2024இல் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிதான். அப்போது, நிச்சயம் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கத்தை பெற்று தருவேன்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஒலிம்பிக் 1928 டு டோக்கியோ 2020: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி கடந்துவந்த பாதை

ABOUT THE AUTHOR

...view details