தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வெள்ளி மங்கை மீரா பாய் சானுவுக்கு பிரதமர் வாழ்த்து! - Tokyo Olympics 2020 india medals

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM Modi wishes Meera Bhai Chanu, PM Modi latest tweet, Tokyo Olympics 2020 tamil, Olympics latest updates tamil, Olympics news tamil, டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020, Meera Bhai Chanu silver medal, Meera Bhai Chanu olympic medal, மீரா பாய் சானு, வெள்ளிப் பதக்கம், silver medal in olympics, Tokyo Olympics 2020 india medals, india medals in Tokyo Olympics 2020
மீரா பாய் சானுவுக்கு பிரதமர் வாழ்த்து

By

Published : Jul 24, 2021, 1:06 PM IST

டோக்கியோ (ஜப்பான்): டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம். வீராங்கனை மீராபாய் சானுவின் அசாத்திய திறமையால் நாட்டிற்கு வெள்ளிப் பதக்கம் சாத்தியமாயிற்று.

வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரது வெற்றி, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கம் தரும் வகையில் இருக்கும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி தொடங்கின. இரண்டாம் நாளான இன்று மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் எடைப் பிரிவில் மீரா பாய் சானு சாதித்துள்ளார். வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், 2020 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்றவர் என்ற பெயரையும் தனதாக்கியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details