டெல்லி: டோக்கியோ 2020 ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 127 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இத்தொடரில், இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என ஏழு பதக்கங்களை பெற்று இருந்தது. இதில் ஈட்டி எறிதலில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, இறுதிப்போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்தியா தடகளப் பிரிவில் பெறும் முதல் பதக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய முகாமில் நான்...
டோக்கியோவில் இருந்துநீரஜ் சோப்ரா நேற்று (ஆக.9) இந்தியா வந்ததையடுத்து, இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) அவருக்கு பாராட்டு விழாவை இன்று (ஆக.10) ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய நீரஜ்,"2015-16ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுகளுக்குப் பிறகு, நான் தேசிய பயிற்சி முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதுதான் என் விளையாட்டு வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது. அதற்கு முன்னர், நானே சமைத்துத்தான் பயிற்சியை மேற்கொண்டு வந்தேன்.
தேசிய முகாமிற்கு வந்தபின் பல வசதிகளை பெற்றேன். மூத்த வீரர்களை பார்த்துத்தான் நான் ஊக்கம் பெற்றேன். நாட்டின் சிறந்த வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டது வித்தியாசமான உணர்வை அளித்தது. கடினமாக பயிற்சி எடுத்ததால் பதக்கம் கிடைத்தது.
வெற்றியின் மதிப்பு