தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

குத்துச்சண்டை வீராங்கனை போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழப்பு - Boxer Janet Zakaria

கனடாவில் குத்துச்சண்டை வீராங்கனை போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

http://10.10.50.85Janet Zakaria dies after collapsing in boxing match//tamil-nadu/04-September-2021/janet-zakaria_0409newsroom_1630754200_123.jpg
Janet Zakaria dies after collapsing in boxing match

By

Published : Sep 4, 2021, 5:07 PM IST

Updated : Sep 4, 2021, 5:14 PM IST

கனடாவில் மான்ட்ரியல் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டைப்போட்டியில் திடீரென சுருண்டு விழுந்த வீராங்கனை ஜெனட் ஜக்காரியா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

18 வயதேயான மெக்சிகோ நாட்டின் குத்துச்சண்டை வீராங்கனை ஜெனட் ஜக்காரியா. இவர் கனடா நாட்டின் மான்ட்ரியல் பகுதியில் நடைபெற்ற கியூபெக்கின் மேரி ஃபையருடன் மோதினார்.

தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லை

அந்தப் போட்டியின் நான்காவது சுற்றில் ஜானட் சுருண்டு விழுந்து, மயக்கம் அடைந்தார்.

அப்போது, அவரை மீட்ட உதவிக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, வியாழக்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு ஜானட் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.

குத்துச்சண்டை போட்டியின்போது வீராங்கனை மயங்கி விழுந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மல்யுத்த வீராங்கனை சந்தேகமான முறையில் மரணம்!

Last Updated : Sep 4, 2021, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details