தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரதமர் வடிவில் தந்தையைப் பார்த்தேன்- பவானி தேவி! - bhavani devi fencing

பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகள் அண்மையில் இழந்த தந்தையின் நினைவுகளை மீட்டெடுத்தன எனப் பவானி தேவி உருக்கமான தெரிவித்துள்ளார்.

பவானி தேவி
பவானி தேவி

By

Published : Aug 18, 2021, 9:40 PM IST

அண்மையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் விருந்தளித்தார்.

அப்போது, பிரதமருடன் பேசிய முழு உரையாடலையும் வாள்வீச்சு ( பென்சிங்) வீராங்கனை பவானி தேவி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், " நான் விளையாடிய வாள் ஒன்றைக் கையெழுத்திட்டு பிரதமருக்கு பரிசாக கொடுத்தேன். என் தாயார் எனக்கு அருகிலிருந்தார். இந்தியாவில் விளையாட்டை மேம்படுத்த அவரது தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்காக தலைவணங்குகிறேன்" என்றார்

பவானி தேவி ட்வீட்

பிரதமர் என்னுடன் பேசுகையில், "முதல் முறையாக ஃபென்சிங் போன்ற புதிய விளையாட்டில் இந்தியாவுக்காக களமிறங்கியது எளிதானது அல்ல. புதுவித போட்டியை அறிமுகம் செய்து, இந்தியர்களைப் பெருமைப்படுத்தி உள்ளீர்கள்.

உங்களின் சாதனைகள் நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும். மகளே நீ 'ஜான்சி ராணி'யை போன்றவர்" எனக் கூறினார்.

மேலும், நான் சமீபத்தில் என் தந்தையை இழந்தேன். பிரதமருடன் உரையாடிய தருணம் எனக்கு தந்தையின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தன. இதைவிட வேறு என்ன வேண்டும்" என பவானி தேவி தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பவானிதேவி ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் களமிறங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'பிரதமரிடம் பேசியது அற்புதமான தருணம்' - பிவி சிந்து!

ABOUT THE AUTHOR

...view details