டெல்லி: நடந்து முடிந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் பங்கேற்ற இந்திய வீரர்களின் குழுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆக. 14) மாலை சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பு ராஷ்ட்ரபதி பவன் கலாசார மையத்தில் நடைபெற்றது.
முன்னதாக, இந்திய நட்சத்திர வீராங்கனைகளான மேரி கோம், பி.வி. சிந்து, மீராபாய் சானு ஆகியோர் ரசிகர்களைச் சந்தித்து வந்தனர். அது குறித்த புகைப்படங்கள், காணொலிகளை இந்திய விளையாட்டு ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
130 கோடி இந்தியர்களின் வேண்டுதல்
இதையடுத்து, ஒலிம்பிக் வீரர்களிடம் உரையாற்றிய ராம்நாத் கோவிந்த்,"நீங்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். இந்த அணிதான் ஒலிம்பிக்கில் அதிக பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளது.