PARALYMPICS: இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி - பிரவீன் குமாருக்கு வெள்ளி
08:35 September 03
டோக்கியோ: பாரா ஒலிம்பிக் தொடர் உயரம் தாண்டுதலில் 18 வயதான இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்துவரும் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த டி 64 உயரம் தாண்டுதலில் 18 வயதான இந்திய வீரர் பிரவீன் குமார் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி கிடைத்துள்ளது.
ஏற்கனவே மாரியப்பனும் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இதுவரை 11 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் 36ஆவது இடத்தில் இருக்கிறது.