தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இரண்டாம் சுற்றில் வீழ்ந்த பவானி தேவி! - டோக்கியோ ஒலிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டின் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி இரண்டாம் சுற்றில் ஏமாற்றம் அளித்தார்.

Bhavani Devi
Bhavani Devi

By

Published : Jul 26, 2021, 9:04 AM IST

டோக்கியோ : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை 23ஆம் தேதி தொடங்கின.

நான்காம் நாளான இன்று நடைபெற்ற மகளிர் தனிநபர் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை பவானி தேவி (Bhavani Devi ) பிரான்ஸ் வீராங்கனை மானன் ப்ரூனெட் (Manon Brunet)ஐ எதிர்கொண்டார்.

இந்த இரண்டாம் சுற்றில் 15-7 என்ற கணக்கில் பவானி தேவி (Bhavani Devi ) பிரான்ஸ் வீராங்கனை மானன் ப்ரூனெட்டிடம் (Manon Brunet) வீழ்ந்தார். வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு இது அறிமுக ஒலிம்பிக் போட்டியாகும்.

எனினும் முதல் ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய பவானி தேவி, போட்டியை வெறும் ஆறே நிமிடத்தில் முடித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : Tokyo Olympics: தமிழச்சி பவானி தேவி வெற்றி

ABOUT THE AUTHOR

...view details