தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'எட்டாண்டு கால உழைப்பின் பலன்' - பதக்கம் வென்ற லவ்லினா நெகிழ்ச்சி! - டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை

எனது எட்டு ஆண்டு கால உழைப்பின் பலனாகவே இந்தப் பதக்கம் கிடைத்துள்ளது என குத்துச்சண்டை வீராங்கனை லவ்வினா தெரிவித்துள்ளார்.

லவ்லினா
லவ்லினா

By

Published : Aug 5, 2021, 6:16 AM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற வீரங்கணை லவ்லினா வெற்றிக்குப் பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

23 வயதான லவ்லினா செய்தியாளர்களுடன் பேசியபோது, "தங்கம் வெல்ல முடியாதது வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது. அரையிறுதிப் போட்டியில் எனது யுக்தியை முறையாக செயல்படுத்த இயலவில்லை.

எதிர்பார்த்தபடி ஆட்டம் செல்லவில்லை. ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு.

எனது எட்டு ஆண்டு கால உழைப்பின் பலனாகவே இந்தப் பதக்கம் கிடைத்துள்ளது. வீட்டை விட்டு வெளியே தங்கி, விரும்பிய உணவுகளை சாப்பிட முடியாமல் தியாகம் செய்துதான் இந்த இலக்கை எட்டியுள்ளேன்.

இத்தருணத்தில் எனக்காக பிரார்த்தனை செய்த நாட்டு மக்கள், எனது பயிற்சியாளர், கூட்டமைப்பு, ஸ்பான்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Tokyo Olympics 14ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கிய போட்டிகள்!

ABOUT THE AUTHOR

...view details