தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

TOKYO PARALYMPICS: இறுதிப்போட்டிக்கு பவினாபென் படேல் முன்னேற்றம்

டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல், சீன வீராங்கனையை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது.

Bhavina Patel
பவினா பென் படேல்

By

Published : Aug 28, 2021, 7:44 AM IST

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சி-4 பிரிவின் அரையிறுதிப் போட்டி இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது.

இதில், இந்திய வீராங்கனை பவினாபென் படேல், சீன வீராங்கனை ஜாங்க் மியாவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 3-2 என்ற செட்கணக்கில் சீன வீராங்கனையை பவினாபென் படேல் வீழ்த்தினார்.

இதையடுத்து, அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால், இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:PARALYMPICS COMPOUND ARCHERY: மூன்றாமிடத்தில் ராகேஷ் குமார்!

ABOUT THE AUTHOR

...view details