ஜெர்மன் நாட்டில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பான ஏடிபி-யால் நடத்தப்படும் ஆடவருக்கான “பெட்1ஹல்க்ஸ் சாம்பியன்ஷிப்” (BETT1HULKS CHAMPIONSHIP) டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.
இத்தொடரில் இன்று (அக். 26) நடைபெற்ற இறுதிச்சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் நட்சத்திர வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனை எதிர்த்து விளையாடினார்.
பரபரப்பான இப்போட்டியில், தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஸ்வெரவ் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் அபாரமாக விளையாடிய ஸ்வெரவ் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஸ்வார்ட்ஸ்மேனுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதன்மூலம் பெட்1ஹல்க்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச்சுற்றில் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையும் படிங்க:கிங்ஸ் லெவனை சிறப்பாக வழிநடத்துகிறார் கேஎல் ராகுல்...!