விம்பிள்டன் டென்னிஸ் தெடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது சுற்றில் உலகின் முன்னணி வீரர்களான ஜோகோவிச், நடால் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: காலிறுதிக்கு நடால், ஜோகோவிச் தேர்ச்சி! - DJOKOVIC
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், நடால் இருவரும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
காலிறுதிக்கு தகுதி பெற்றனர் நடால் மற்றும் ஜோகோவிச்!
உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச், பிரான்சைச் சேர்ந்த ஊகோ ஹும்பெர்டை 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி 11ஆவது முறையாக விம்பிள்டன் தொடர் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மேலும், மற்றொரு ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஃபேல் நடால் போர்ச்சுகளின் ஜோனோ சௌசாவை 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் தொடர் காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.