லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் 2019 டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், நவோமி ஒசாகாவும் - யூலியா புடிண்டும் மோதினர் விறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் முதல் தகுதி சுற்றிலேயே 6-4, 6-2 என்ற கணக்கில் யூலியாவால் தோற்கடிக்கப்பட்டார் நவோமி ஒசாகா.
முதல் சுற்றிலேயே வெளியேறினார் நவோமி ஒசாகா - 2019
லண்டன்: உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த டென்னிஸ் நாயகி நவோமி ஒசாகா, விம்பிள்டன் 2019 சுற்றின் முதல் ஆட்டத்திலேயே வெளியேறினார்.
தன் திறமையான ஆட்டத்தினால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒசாகா முதல் ஆட்டத்திலேயே தோற்றது, அவரின் ரசிகர்கள் வருத்தமடைய செய்துள்ளது.
இதுகுறித்து ஒசாகா கூறுகையில், நான் நன்றாக விளையாடியதாக எனக்கு தோன்றவில்லை. இந்த தோல்வி எனக்கு ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஏனென்றால் நான் இதற்கு முன்பே யூலியாவுடன் விளையாடிருக்கிறேன் என புன்னகையுடன் கூறினார். கடந்த ஆண்டு யு.எஸ் ஓபன் டென்னிஸ் மற்றும் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் வென்றவர் ஒசாகா என்பது குறிப்பிடத்தக்கது.